ஜிஎஸ்டி அமலாக்கத்தில் வணிகர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்: ஜெயக்குமார்

சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கத்தில் வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி அமலாக்கத்தில் வணிகர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்: ஜெயக்குமார்

சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கத்தில் வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு வணிகவரித் துறை சார்பில், ஜிஎஸ்டி குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு கலைவாணர் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை, நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். இந்தக் கருத்தரங்கில், ஜூலை 1 }ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள ஜிஎஸ்டி}யின் சிறப்பம்சங்கள், சுங்கவரி சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட தொடர்பாக வணிகர்களுக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கருத்தரங்கில், அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:
மதிப்பு கூட்டு வரி (வாட்) கொண்டு வந்ததை போலவே, ஜிஎஸ்டி}யிலும் மாநிலங்களின் சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியுடன் இருந்தார். இதற்காக, மாநில சுயாட்சி காக்கும் வகையில் பல விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அவர் கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து பெட்ரோலிய பொருள்கள், மதுபான வகைகளுக்கு ஜிஎஸ்டி}யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், மாநில அரசுக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டது. அதுபோல், வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சிலின் முன் ஆய்வுக்கு வைக்கப்பட்டது. இதில், 66 பொருள்களுக்கு வரிவிலக்கு அல்லது வரி குறைப்பு பெறப்பட்டது.
தற்போதுநிலையில், ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வர மத்திய, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஜிஎஸ்டி சட்டம் மூலம் நாடு முழுவதும் ஒரே வரியை செலுத்தலாம். இதனால் உற்பத்தி பெருகுவதோடு, விலையும் குறையும். மேலும், வணிகர்களுக்கு குறைகள், சிக்கல்கள் ஏதேனும் இருப்பின், ஜிஎஸ்டி கவுன்சிலில் அழுத்தம் தரப்பட்டு தீர்வு காண தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.
கருத்தரங்கில், அமைச்சர் வீரமணி பேசியதாவது:
வணிகர்களுக்கு ஜிஎஸ்டி இடையூறாக இருக்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் வணிகவரித் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். மேலும், வணிகர்களுக்கு சிக்கல் ஏற்படாதவகையில் தமிழக அரசு துணையாக இருக்கும் என்றார்.
கருத்தரங்கில், மத்திய சரக்குகள், சேவைகள் வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ், வணிகவரித் துறை ஆணையர் ச.சந்திரமௌலி, அதிகாரிகள் ஆகியோர் நூற்றுக்கணக்கான வணிகர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com