ரூ.300 கோடியில் 2065 ஏரிகள் தூர்வாரப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் பங்களிப்புடன் ரூ.300 கோடியில் 2065 ஏரிகள் தூர்வாரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ரூ.300 கோடியில் 2065 ஏரிகள் தூர்வாரப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் பங்களிப்புடன் ரூ.300 கோடியில் 2065 ஏரிகள் தூர்வாரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏரி, குளங்களைத் தூர்வார நடவடிக்கை எடுத்தப் பிறகு அரசும் அந்தப் பணியில் ஈடுபடுவதாகக் கூறினார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுப் பேசியது: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணி திட்டத்தைத் துவக்கி வைத்தோம்.
முதல் கட்டமாக குடிமராமத்துப் பணிக்காக ரூ. 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,519 ஏரிகள் இந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டு, ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்துதல், மதகுகளைச் சீர்செய்தல்,
தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 80 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரால் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
அதை ஏற்று மேலும் ரூ.300 கோடி இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் பங்களிப்போடு கிட்டத்தட்ட 2,065 ஏரிகள் விரைவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு, தூர்வாரப்படும்.
பருவமழை பெய்யும் போது கிடைக்கும் நீரை, முழுமையாக ஏரிகளில், அணைகளில் மற்றும் குளங்களில் தேக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தக் குடிமராமத்துத் திட்டத்தைப் பொருத்தவரையில் விவசாயிகளின் பங்களிப்போடு செய்யப்படும் திட்டம். இதற்காக ஒப்பந்தம் விடுவதில்லை. அங்கேயிருக்கும் பாசன விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்கள் சங்கத்தின் மூலமாக பதிவு செய்திருக்கின்றனர். அவர்களை வைத்துத்தான் நாங்கள் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com