தொடங்கியது + 2 தேர்வு: எழும்பூர் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு! 

தமிழகம் முழுவதும் இன்று + 2 தேர்வு தொடங்கியது. சென்னை எழும்பூர் பள்ளியில் தேர்வுக்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
தொடங்கியது + 2 தேர்வு: எழும்பூர் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு! 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று + 2 தேர்வு தொடங்கியது. சென்னை எழும்பூர் பள்ளியில் தேர்வுக்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்தத் தேர்வை 9,34,868 பேர் எழுதுகின்றனர். தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபடுவோரைக் கண்காணிப்பதற்காக, 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 6,737 பள்ளிகளிலிருந்து 4,80,837 மாணவிகளும், 4,17,994 மாணவர்களும், 3-ஆம் பாலினத்தவர் ஒருவரும், தனித்தேர்வர்களாக 34,868 பேரும், சிறைக் கைதிகள் 98 பேரும் என 9,34,868 பேர் எழுதுகின்றனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள +2 தேர்வு மையத்தை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தலைமையில் அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். அவருடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா மற்றும் உயர் அதிகாரிகளும் குழுவில் இடம் பெற்றனர்.

அங்கு செய்யப்பட்டிருந்த தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

இங்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை பார்வையிட்டேன். போன ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 65 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கபட்டு உள்ளது.இந்த அரசானது கலவித்துறையில் பல்வேறு மாற்றங்ளை கொண்டு வரும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.

இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com