16 வருடம் போராடினா 87 ஓட்டுதானா? மணிப்பூர் ஷர்மிளாவுக்காக வருந்தும் தீபா!

மணிப்பூர் மக்களுக்காக 16 வருடம் போராடிய 'இரும்புப்பெண்மணி'  இரோம் ஷர்மிளாவுக்கு 87 ஓட்டுக்கள்தானா என்று எம்.ஜி.ஆர் - அம்மா பேரவை தலைவர் தீபா வருத்தம் தெரிவித்துள்ளார்.
16 வருடம் போராடினா 87 ஓட்டுதானா? மணிப்பூர் ஷர்மிளாவுக்காக வருந்தும் தீபா!

சென்னை: மணிப்பூர் மக்களுக்காக 16 வருடம் போராடிய 'இரும்புப்பெண்மணி'  இரோம் ஷர்மிளாவுக்கு 87 ஓட்டுக்கள்தானா என்று எம்.ஜி.ஆர் - அம்மா பேரவை தலைவர் தீபா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்  சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மணிப்பூரில் இத்தனைஆண்டுகளாக அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து போராடி வந்த 'இரும்புப் பெண்மணி' இரோம் ஷர்மிளா புதிய கட்சி துவங்கி போட்டியிட்டார். இவர்  தவுபால் தொகுதியில் மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் தீவிர பிரசாரத்தில் இரோம் ஷர்மிளா  ஈடுபட்டிருந்தார். ஆனாலும் இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார். அவர் 15,000-க்கும் அதிகமான வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரோம் ஷர்மிளா 87 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இரோம் ஷர்மிளாவின் தோல்வி குறித்து எம்.ஜி.ஆர்.-அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா தம்முடைய முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டிருந்தார்.

"தங்களது நலனுக்காக தான் போராடினார் என்பது கூட தெரியாமல் வேடிக்கை பார்த்த மக்கள் தந்த தோல்வியால் வருந்தப்போவது இந்த இரும்புப்பெண்மணி இல்லை. இவரை தோற்கடித்தற்காக ஒவ்வொரு நாளும் மக்கள் வருந்துவார்கள்."

சிறிது நேரத்தில் அதை நீக்கி விட்டு "16 வருடங்கள் மக்களுக்காக போராடினால் 87 வாக்குகள் பெறலாம்" என்று மாற்றி பதிவிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com