ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி!

தில்லியில் நேற்று மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி ...
ஜேஎன்யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி!

சென்னை: தில்லியில் நேற்று மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுதில்லி ஜவகர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழகத்தில் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர நவீன வரலாறு பாடத்தில் எம்.பில். படித்து வந்தார். இவர் தலித் பிரிவைச் சேர்ந்த மாணவர் ஆவார் இவர் நேற்று இரவு தில்லி ஜேஎன்யு மாணவர்கள் விடுதியில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தில்லி வந்த முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்துவிட்டார்.அத்துடன் முத்துகிருஷ்ணனின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மாணவனின் மரணத்தால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடலை தமிழகம் கொண்டு வரத் தேவையான அனைத்து உதவிளையும் தமிழக அரசு செய்யும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com