பண மோசடி வழக்கு: முன்னாள்  அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய நீதிமன்றம் தடை! 

பண மோசடி வழக்கு ஒன்றில் முன்னாள்  அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய ஒரு நாள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பண மோசடி வழக்கு: முன்னாள்  அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய நீதிமன்றம் தடை! 

மதுரை: பண மோசடி வழக்கு ஒன்றில் முன்னாள்  அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கைது செய்ய ஒரு நாள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-அம ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை திரும்ப தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது திண்டுக்கல் ஒன்றிய அதிமுக இளைஞரணி துணைச் செயலர் ஏ.சபாபதி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடைப்படையில் போலீஸார் கொலை மிரட்டல், மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விஸ்வநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில் அரசியல் காரணங்களுக்காக என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது நத்தம் விஸ்வநாதன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன், 'நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.70 லட்சம் வரை தான் செலவு செய்யத்தான் அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் மனுதாரர் தேர்தல் செலவுக்காக ரூ.4 கோடிக்கும் மேல் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதன் மூலமே இது பொய்யான புகார் என்று தெரிகிறது. இது அரசியல் விரோதம் காரணமாக புனையப்பட்ட வழக்கு' என்று தெரிவித்தார்.

அப்பொழுது புகார்தாரர் சபாபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களையும் இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது விசாரணையை ஒத்தி வைக்க கோரினார்.

அப்போது நீதிபதி, 2014-ல் நடைபெற்ற மோசடிக்கு அப்போதே புகார் அளிக்காமல் இப்போது புகார் அளித்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள். எனவே அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்யாமல்  ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். அதுவரை நத்தம் விஸ்வநாதனை கைது செய்யக்கூடாது என்றும் காவல்துறைக்கு தடை விதித்து அவர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com