ஆர்.கே.நகர்: மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, அவர் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தல் பணிக் குழு, தேர்தல் பிரசாரக் குழு அமைப்பது தொடர்பாகவும், தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது: ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளோம். ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில்தான் தற்போதைய அதிமுக அரசு செயல்படுகிறது. மக்கள் நலப் பணியில் அதிமுக அரசு செயல்படவில்லை என்றார் அவர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com