இலங்கை மனித உரிமை மீறல்: இந்தியாவின் நிலைப்பாட்டை மறுசீராய்வு செய்ய வேண்டும்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஏதுவாக இந்தியா தனது நிலைப்பாட்டை மறுசீராய்வு செய்ய வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஏதுவாக இந்தியா தனது நிலைப்பாட்டை மறுசீராய்வு செய்ய வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அன்புமணி திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று, தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடத்திய இலங்கை இராணுவத்தினர் தமிழர்கள் மத்தியில் இப்போதும் இருக்கிறார்கள். இந்த இனப் படுகொலை குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தில் சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசு கால நீட்டிப்பு கோருகிறது. இதனை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் உள்ள தமிழர்கள் முழுமையாக மறுவாழ்வு பெறவும், இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறலை வெளிக்கொணர சர்வதேச நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள நிலைப்பாட்டை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தின் நகலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் அன்புமணி அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com