தினமணி செய்தி எதிரொலி: போக்குவரத்து ஊழியர்களின் அஞ்சலக காப்பீட்டுத் தொகையைச் செலுத்த நடவடிக்கை

நிலுவையில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் அஞ்சலக காப்பீட்டுத் தொகையைச் செலுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிலுவையில் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் அஞ்சலக காப்பீட்டுத் தொகையைச் செலுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அஞ்சலகத் துறை காப்பீட்டுத் திட்டங்களில் சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் இணைந்துள்ளனர். இதற்காக, மாதந்தோறும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து போக்குவரத்துக் கழகம் குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்து மாதந்தோறும் அஞ்சல் துறைக்குச் செலுத்த வேண்டும். எனினும் கடந்த பல மாதங்களாகப் போக்குவரத்து ஊழியர்களின் காப்பீட்டுத் தொகையை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து தாமதமாக அஞ்சல் துறைக்குச் செலுத்தி வந்தது.
இது குறித்து "போக்குவரத்து ஊழியர்கள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் சிக்கலா?' என்ற தலைப்பில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து காப்பீட்டுத் தொகை நிலுவையை அஞ்சல் துறைக்குச் செலுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 5 மாதங்களாக போக்குவரத்து ஊழியர்களின் காப்பீட்டுத் தொகை நிலுவையில் இருந்தது. தற்போது அஞ்சல் துறைக்குச் செலுத்த வேண்டிய காப்பீட்டு நிலுவைத் தொகையான ரூ.2.75 கோடியில், முதல் கட்டமாக ரூ.75 லட்சத்துக்கான காசோலையை மாநகர போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையையும் விரைவில் செலுத்த உள்ளதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com