தமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு

தமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய அரசு

புதுதில்லி: தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்காக ஏற்கனவே 80 நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தேர்வுகளை நடத்துவதற்கான 23 நகங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகழத்தில் மேலும் இந்தாண்டு நாமக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய மனிதவள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை, இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நேரில் சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர், உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் தில்லி சென்று வலியுறுத்தவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதல் பெற்று மத்திய அரசின் பார்வையில் உள்ளது. எனவே, இந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதிலும், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்காகத்தான் இந்தச் சட்டப் போராட்டத்தை நடத்துகிறோம் என்றும் 'நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. அரசியல்ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறோம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com