அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சனிக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் சனிக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியரகம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு
அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எல். ஜெய்சிங் தலைமை வகித்தார். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு உதவி பெறும் பள்ளி ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். மாத ஊதியத்தை காலம் தவறாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சம்மேளன கெüரவத் தலைவர் எம்.ஜார்ஜ், அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் சங்கத் தலைவர் பிரின்ஸ், செயலர் ராஜேந்திரன், அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் பி.வி.சுப்ரமணியன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அய்யப்பன், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com