இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் எனக் கூறியது ஏன்?

நடிகர் ரஜினிகாந்த்தின் பயணம் இலங்கை அரசுக்கு சாதகமானச் சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அவருடைய பயணத்தை எதிர்த்தோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் பயணம் இலங்கை அரசுக்கு சாதகமானச் சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அவருடைய பயணத்தை எதிர்த்தோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்களை தொடங்கிவைக்க நடிகர் ரஜினிகாந்த்தை அந்த நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், இலங்கைப் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அந்த விழாவையே தனியார் நிறுவனம் ரத்து செய்தது. மேலும், ரஜினிகாந்த் இந்த முடிவை எடுக்கக் காரணமான அரசியல் கட்சிகளுக்கு அந்த நிறுவனம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை ஆட்சியாளர்களை 40-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்டித்திருக்கும் இந்தச் சூழலில், ரஜினிகாந்த்தின் இலங்கைப் பயணம் இலங்கை அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும் என்பதாலேயே எதிர்ப்பு தெரிவித்தோம். ரஜினிகாந்த் பயணம் மூலமாக இலங்கை ஆட்சியாளர்கள் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என்பதுதான் வடக்கு மாகாணத் தமிழர்களின் அச்சமும்.
ரஜினிகாந்தை எதிர்ப்பதோ, அல்லது அவருக்கு அழைப்பு விடுத்த தனியார் நிறுவனத்தை எதிர்ப்பதோ எங்களின் நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com