ஜிப்மர் நுழைவுத் தேர்வு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு, திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு, திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 200 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தனியாக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான நுழைவு தேர்வு, வருகிற ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 75 நகரங்களில் தேர்வு நடைபெறும். புதுவை மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களிலும் தேர்வு நடைபெறும்.
நுழைவுத் தேர்வுக்காக, 27-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் மே 3-ஆம் தேதி கடைசி நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com