தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

வரும் 2021 -ஆம் கல்வியாண்டுக்கு இப்போதே மாணவர் சேர்க்கையை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

வரும் 2021 -ஆம் கல்வியாண்டுக்கு இப்போதே மாணவர் சேர்க்கையை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி. வகுப்புக்கு 2020 -ஆம் ஆண்டு வரை சேர்க்கை நிறைவடைந்துவிட்டது, 2021 -ஆம் கல்வியாண்டுக்கு குழந்தைகளைச் சேர்க்க விரும்புபவர்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. இது, கல்வி பெறும் உரிமைச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும்.
மேலும், ஒரு பள்ளி எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றினாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் விதிகளைப் பின்பற்றாமல், கல்வியை வணிக ரீதியில் மாற்றி வருகின்றன. எனவே, இதுபோன்ற தனியார் பள்ளிகளைக் கண்டறிந்து, 2020 -ஆம் ஆண்டு வரை அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளிப்படையான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய, வட்டார அளவில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com