ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: இறுதி களத்தில் 62 பேர்: 4 மின்னணு இயந்திரங்கள் பொருத்தப்படும்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் இறுதி களத்தில் 62 வேட்பாளர்கள் உள்ளனர். எனவே வாக்குச்சாவடிகளில், நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: இறுதி களத்தில் 62 பேர்: 4 மின்னணு இயந்திரங்கள் பொருத்தப்படும்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் இறுதி களத்தில் 62 வேட்பாளர்கள் உள்ளனர். எனவே வாக்குச்சாவடிகளில், நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இடைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவு வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். 64 பேருக்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் இப்போது புழக்கத்தில் இருக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது.
மாறாக, பெல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு ஆந்திரத்தில் இப்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த இயந்திரத்தில் எவ்வளவு வேட்பாளர்களின் பெயர்களையும் இணைக்கலாம்.
ஆர்.கே.நகரைப் பொருத்தவரை, 62 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவையில்லை.
62 வேட்பாளர்கள் போட்டி: தமிழகத்தில் இப்போது புழக்கத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில், கட்டுப்பாட்டு இயந்திரம் போக ஒரு இயந்திரத்தில் (வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பொத்தான்கள்) 16 வேட்பாளர்களின் பெயர், சின்னத்தை இடம்பெறச் செய்யலாம்.
இதுபோன்று, நான்கு இயந்திரங்களை கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைத்தால் மொத்தம் 64 பேரின் பெயர்கள் இடம்பெறும். அதன்படி, ஆர்.கே.நகரில் 62 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், ஒரு நோட்டா பொத்தானும் இடம்பெறும். அதன்படி, 63 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் இடம்பெறுவதால் நான்கு இயந்திரங்கள் வரிசையாக பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் இருக்கும்.
வாக்குச் சீட்டு முறையே இல்லை....: ஒரு தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கேற்ற அதிநவீன வாக்குப் பதிவு இயந்திரத்தை பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரத்தில் எத்தனை வேட்பாளர்களின் பெயர்களையும், சின்னங்களையும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இணைத்துக் கொண்டே செல்லலாம்.
இதனால், பழைய முறையான வாக்குச் சீட்டு முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது பின்பற்றப்படும் என்ற தகவல்களே தவறானது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணிகளைத் தொடங்கிய பார்வையாளர்கள்: ஆர்.கே.நகரில் தேர்தல் பணிகளை பார்வையாளர்கள் தொடங்கியுள்ளனர். பொதுப் பார்வையாளராக பிரவீண் பிரகாஷ் (செல்லிடப்பேசி எண்: 9445036578), சட்டம்-ஒழுங்கு காவல் பிரிவு பார்வையாளராக சிவ்குமார் வர்மா (9445036579), செலவுக்கணக்கு பார்வையாளராக அபர்ணா வில்லூரி (9445036584) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தங்களது பணிகளை ஆர்.கே.நகரில் தொகுதியில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வருமான வரித் துறை: ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகளவு பணம் விநியோகிக்கப்படுகிறதா என்பதை வருமான வரியின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது.
இதற்கென தனியாக படை அமைக்கப்பட்டு இந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும், பணம், பரிசுப் பொருள்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வரும் புகார்களும் வருமான வரித் துறைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com