நடிகர் சூரியின் தந்தை முத்துச்சாமி காலமானார்

திரைப்பட நடிகர் சூரியின் தந்தை முத்துச்சாமி மதுரையில் திங்கள்கிழமை காலமானார்.

திரைப்பட நடிகர் சூரியின் தந்தை முத்துச்சாமி மதுரையில் திங்கள்கிழமை காலமானார்.
திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை முத்துச்சாமி(75). மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாக்கூரில், மனைவி சேங்கை அரசியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த முத்துச்சாமி, திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். ராஜாக்கூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முத்துச்சாமியின் உடலுக்கு நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சசிகுமார், இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் செவ்வாய்க்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. முத்துச்சாமிக்கு சூரி, முத்துராமலிங்கம், லட்சுமணன், செல்லமுத்து, ஆதீஸ்வரன், சீனிவாசன் ஆகிய ஆறு மகன்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com