இணைப்பு இருக்கட்டும்: ஒரு மாதம் தமிழக 'சுற்றுப்பயணம்' போகப் போகிறார் ஓ.பி.எஸ்!

அதிமுக இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்குமா தொடங்காதா என கேள்விகள் நிலவி வரும் வேளையில்...
இணைப்பு இருக்கட்டும்: ஒரு மாதம் தமிழக 'சுற்றுப்பயணம்' போகப் போகிறார் ஓ.பி.எஸ்!

சென்னை: அதிமுக இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்குமா தொடங்காதா என கேள்விகள் நிலவி வரும் வேளையில், முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது 

அதிமுக இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்த இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இரு தரப்பிலும் மாறி மாறி முரணான பேட்டிகள் கொடுக்கப்பட்டு வருவதால்  பேச்சுவார்த்தை தொடங்குமா தொடங்காதா, இணைப்பு நடக்குமா நடக்காதா என கேள்விகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்யய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாத காலம் நீடிக்க உள்ள இந்த சுற்றுப்பயணமானது வரும் 5-ஆம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத கால பயணத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ள பன்னீர்செல்வம் தன்னுடைய அணிக்கு ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது.

அவரது இந்த சுற்று பயணத்தின் காரணமாக இணைப்பு குறித்த பேச்சுவார்தைகள் நடைபெறுமா, இணைப்பே நடைபெறுமா என்பது எல்லாம் தற்பொழுது கேள்விக்குறியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com