செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நீதிமன்றத்தில் முருகன் மீண்டும் ஆஜர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள முருகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள முருகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை மேற்கொண்ட போது இரண்டு செல்லிடப்பேசிகள், சிம்கார்டு, சார்ஜர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், முருகன் மீது பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மற்றவர்களைச் சந்தித்துப் பேச முருகனுக்கு சிறை நிர்வாகம் 3 மாதங்களுக்குத் தடை விதித்தது.

இதுதொடர்பான வழக்கு வேலூர் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com