வறட்சியால்தான் விவசாயிகள் தற்கொலை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்

வறட்சியால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்
வறட்சியால்தான் விவசாயிகள் தற்கொலை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்

வறட்சியால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றார் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

திருச்சி மாவட்டம், இனாம்புலியூரில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த அவர் அளித்த பேட்டி:
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எனவே, வறட்சியால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதுபோல, ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும். தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

புதுதில்லியில் 41 நாள்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திய தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணுவை அப்சல் குருவுடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் தனது பேச்சை திரும்பப் பெறுவதோடு, தமிழக விவசாயிகள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஹெச்.ராஜா பேச்சு விவகாரத்தில் தமிழக பா.ஜ.க.வின் கருத்து என்ன என்பதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் மாநில பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com