இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் 

இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் 

சென்னை: இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மீன்பிடி தடைக்காலம் என்பது பொதுவாக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும்.தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி 45 நாட்கள் வரை இந்த தடைக்காலம் நீடிக்கும்.

ஆனால் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இந்த முறை இந்த மீன்பிடி தடைக்காலமானது 61 நாட்களாக நீடிக்கப்படுகிறது என்று அறிவித்தார். அதன் படி மே 31-ஆம் தேதிக்கு பதிலாக, இனி ஜூன் 15-ஆம் தேதிதான் தடைக்காலம் முடிவடையும்.     

மேலும் மீனவர்களுக்கான ' தாய்க்கப்பல்' திட்டம் விரைவில்  செயல்படுத்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேதமடைந்த சென்னை நடுக்குப்பம் மீன் சந்தையானது ரூ.32 லட்சம் செலவில் நிரந்தரமாக புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com