தமிழகத்தில் உற்பத்தி பாதித்தால் மலிவு விலையில் மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழகத்தில் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டால் மலிவு விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி பாதித்தால் மலிவு விலையில் மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழகத்தில் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டால் மலிவு விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழகத்தில் மின் தடை ஏற்படும் என்பது போன்ற அறிக்கை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் தற்போதைய மின் தேவை நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் மெகாவாட். ஆனால் உற்பத்தி 17,400 மெகாவாட். காற்றாலை மூலம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மெகாவாட், சூரியஒளி மூலம் 1,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கோடைக்கால மின்சாரத் தேவையை எதிர்கொள்ள பிப்ரவரி மாதம் முதல் மே 15-ஆம் தேதி வரைக்கு 1,022 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டால் மின் சந்தையில் 1,000 மெகாவாட் வரை மலிவு விலை மின்சாரம் தினமும் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் கையிருப்பு மின்சாரம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் மின்சாரத்துக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் வதந்தியை நம்ப வேண்டாம்.
கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக மின் உபகரணங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு தாற்காலிக மின் தடை ஏற்படுகிறது. இதனை உடனுக்குடன் சரிசெய்ய அதிகாரிகளும் களப் பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்சாரம் விற்பனை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களின் தேவைக்கேற்ப யூனிட் ரூ.4.10 வீதம் மின்சாரம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com