சரத்குமாரிடம் வருமான வரித்துறை 6 மணி நேரம் விசாரணை

வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் சரத்குமாரிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இது குறித்த விவரம்:
சரத்குமாரிடம் வருமான வரித்துறை 6 மணி நேரம் விசாரணை

வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் சரத்குமாரிடம் சென்னையில் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இது குறித்த விவரம்:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் உள்பட 50 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 7,8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையில் ரூ. 5 கோடி பணமும், ரூ.89 கோடி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணமும் வருமான வரித்துறையிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கீதா லட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் முதல் கட்ட விசாரணை செய்தனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் இரண்டாவது கட்ட விசாரணையை கடந்த வாரம் தொடங்கினர். இதன் முதல் கட்டமாக, விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 4-ஆம் தேதி 8 மணி நேரம் விசாரித்தனர்.
6 மணி நேரம் விசாரணை: இதற்கிடையே நடிகர் சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி, நடிகர் சரத்குமார் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநர் கார்த்திக் மாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
நண்பகல் 1.30 மணி வரை விசாரணை நடைபெற்றது. பின்னர் சரத்குமார் அங்கிருந்து மதிய உணவு சாப்பிட வெளியே புறப்பட்டுச் சென்றார். அதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் சரத்குமார் மீண்டும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறையினர் பல கட்டங்களாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மாலை 6 மணியளவில் விசாரணை முடிந்து சரத்குமார் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், வரி ஏய்ப்பு குறித்தும், விஜயபாஸ்கருடன் உள்ள தொடர்பு குறித்தும் வருமான வரித்துறையினர் கேள்விகளை சரத்குமாரிடம் கேட்டதாக தெரிகிறது. வருமான வரித்துறையின் விசாரணைக்கு மூன்றாவது முறையாக சரத்குமார் ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அழைப்பாணை அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com