சேகர் ரெட்டியுடனான தொடர்பு: ஓ.பி.எஸ்.ஸை விசாரிக்க வேண்டும்

சேகர் ரெட்டியுடனான தொடர்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டுமென சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சேகர் ரெட்டியுடனான தொடர்பு: ஓ.பி.எஸ்.ஸை விசாரிக்க வேண்டும்

சேகர் ரெட்டியுடனான தொடர்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டுமென சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஓ.பி.எஸ். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதுதான் சேகர் ரெட்டிக்கு அத்துறையின் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. அவரை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக நியமித்தது யார்? எனவே அவருக்கும், சேகர் ரெட்டிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
சென்னையில் குழந்தைகளுக்கான இலவச நீச்சல் பயிற்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணிதான் முடிவு செய்ய வேண்டும். அந்த அணியைச் சேர்ந்த செம்மலை எங்கள் அணியிலிருந்து 12 அமைச்சர்கள், 35 எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக உள்ளதாக மிகப்பெரிய பொய்யைக் கூறியுள்ளார்.
ஓட்டைப் படகு: ஓ.பி.எஸ். அணி கடலில் மூழ்கும் ஓட்டைப் படகு. இந்த ஓட்டையை உப்பு வைத்து அடைத்து விடலாம் என்ற எண்ணத்தில் வீண் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாறாக ஓபிஎஸ் அணியில் இருக்கும் ஒரு சில உறுப்பினர்கள் எங்களுடன் இணைவதற்காகப் பேசி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில்தான் நீதிமன்றத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. மறைந்த ஜெயலலிதா வழியில் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சிறப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com