ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படாது

தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல செயல்படும் என தமிழக பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல செயல்படும் என தமிழக பெட்ரோல் டீசல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: பிரதமர் மோடி கடந்த 18-ஆம் தேதி மக்களுக்கு ஆற்றிய உரையில், எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தைப் பேணும் விதமாக, வாரத்தில் ஒரு நாள் எரிபொருள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்புக்கு ஏற்ப பெட்ரோலிய விற்பனையாளர்களான நாங்கள் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் விதத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் விடுமுறை அளிப்பது என்று அறிவிப்பு செய்திருந்தோம்.

அதன்பின்பு, பிரதமரின் வேண்டுகோள் பொது மக்களுக்கானது என்றும், நீங்கள் விடுமுறை அளித்தால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் சுட்ரையில் கருத்துத் தெரிவித்திருந்தார். எனவே, அமைச்சரின் கருத்துக்கிணங்க ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்ற நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு, வழக்கம்போல சில்லறை விற்பனை நிலையங்கள் இயங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com