சென்னைக்கு அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

சென்னையில் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய கடுமையான வெப்பம் தணிந்து ஒரு சில நாட்களாக கரு மேகங்களும், ஆங்காங்கே மழையும் பெய்த நிலை அடுத்த வாரத்துக்கும் நீடிக்குமா?
சென்னைக்கு அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?


சென்னை: சென்னையில் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய கடுமையான வெப்பம் தணிந்து ஒரு சில நாட்களாக கரு மேகங்களும், ஆங்காங்கே மழையும் பெய்த நிலை அடுத்த வாரத்துக்கும் நீடிக்குமா?

இல்லை, மீண்டும் கடுமையான வெப்பத்தை சந்திக்க வேண்டிய நிலையிலேயே சென்னை வாசிகள் இருக்கின்றனர் என்கிறது இதற்கான பதில்.

சென்னைக்கு அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அதில், சென்னையை சுற்றி வந்த அனைத்து காளிஃபிளவர் மேகக் கூட்டங்களும் போய்விட்டன. இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து சென்னைக்கு இதுவரை வெறும் 7 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

வரும் திங்கட்கிழமை முதல், வெப்ப நிலை மெதுவாக உயரும். வரும் வாரத்தில், சென்னையில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகும்.

ஆனால், அதே சமயம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை தொடரும். தென்மேற்கு பருவ மழை குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று காலை முதலே பரவலாக மேகக் கூட்டங்கள் காணப்பட்டன. போரூர், வடபழனி உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் நேற்று காலை 10 மணியளவில் லேசான மழை பெய்தது.

இன்று காலையும் அவ்வப்போது மேகக் கூட்டங்கள் சென்னையை வலம் வந்த நிலையில், அடுத்த வாரத்துக்கான கணிப்பு சென்னை வாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com