கோயம்பேடு சந்தையில் விண்ணை முட்டும் காய்கறி விலை; தக்காளி விலை இரட்டிப்பாகும்?

கோடை வெப்பத்தைப் போலவே சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளன.
கோயம்பேடு சந்தையில் விண்ணை முட்டும் காய்கறி விலை; தக்காளி விலை இரட்டிப்பாகும்?


சென்னை: கோடை வெப்பத்தைப் போலவே சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளன.

கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி விலையும் 10 நாளில் இரட்டிப்பாக வாய்ப்பிருப்பதாகவும் வியாபாரிகள் கணித்துள்ளனர்.

மொத்த விற்பனைக் கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.80-90 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு சில மாதங்களுக்கு தொடரும் என்றும், வரத்து அதிகரித்தால்தான் விலை குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

பீன்ஸ், காரட், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் பீன்ஸ் விலைதான் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கேரட் மற்றும் அவரைக்காய் விலையும் பீன்ஸுக்கு நிகராக ஒரு கிலோ ரூ.60-70 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையான பீட்ரூட் தற்போது இரு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகிறது.

தற்போதைக்கு வெங்காயம், தக்காளி விலைகள் மட்டுமே ஓரளவுக்குக் குறைந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.10க்கும், வெங்காயம் ரூ.15க்கும் மொத்த விற்பனைக் கடைகளில் விற்கப்படுகிறது.

காய்காறிகளின் விலை உயர்வுக்குக் காரணம், குறைந்த வரத்து தான் என்றும், தினமும் 450 முதல் 500 டிரக்குகளில் வந்து கொண்டிருந்த காய்கறிகள் கடந்த 2 வாரங்களாக 350 டிரக்குகளில் மட்டுமே வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தக்காளி விலையும் இரட்டிப்பாகும் என்று கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரிகள் கழகத்தின் செயலர் அப்துல் காதர் கூறியுள்ளார்.

வெப்ப நிலை அதிகரித்திருப்பதால், கொத்தமல்லி வரத்து குறைந்து தற்போது ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.15-20க்கு விற்பனையாகிறது. தக்காளி, வெங்காயம் விலை மட்டுமே வாங்கும் அளவில் இருப்பதாகவும், மற்ற காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டிருப்பதாகவும் பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com