சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும்: மைத்ரேயன் பேட்டி

சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும்: மைத்ரேயன் பேட்டி

தமிழக அரசு, அதன் பாராம் தாங்காமல் தானாகவே கவிழும் என ஓபிஎஸ் ஆதரவாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன்

சென்னை: தமிழக அரசு, அதன் பாராம் தாங்காமல் தானாகவே கவிழும் என ஓபிஎஸ் ஆதரவாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் கூறினார்.

அதிமுக என்ற மாபெரும் இயக்கம் 1972-இல் உருவாக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். எம்.ஜி.ஆர். மறைந்தபோது 17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக ஜெயலலிதாவின் உழைப்பால் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக உருவானது.

அதிமுக தொண்டர்களின் இயக்கமாகச் செயல்பட்டு வரும். அதிமுக தனிப்பட்ட குடும்பத்துக்குள் சென்றுவிடக் கூடாது என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பாடுபட்டனர். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இரு அணிகளாக பிரிந்து இரு அணியினரும் தினமும் செய்தியாளர்களை சந்தித்து போட்டிக்கு போட்டி பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. இரண்டுமே தேடக்கூடிய நிலையில் தான் உள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தில் ஆட்சி என ஒன்று உள்ளதா என்ற நிலைதான் தற்போது நிலவி வருகிறது. சென்னையில் உள்ள தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கும் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.  

தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகின்றனர். சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைச்சர் காமராஜ் மீது ரூ.30 லட்சம் பண மோசடி வழக்கு, அமைச்சர் சரோஜா, பெண் அதிகாரிக்கு மாறுதல் கேட்டதன் வகையில் ரூ.30 லட்சம் கேட்டு லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.

ஜெயலலிதா இருந்த போது ராணுவ கட்டுப்பாட்டுடன் அனைவரும் செயல்பட்டனர். ஆனால், தற்போது அனைவரும் தனது இஷ்டம் போல் செயல்படுகின்றனர்.

ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும் ஒபிஎஸ் விரைவில் அமைச்சராவார். இரட்டை இலை சின்னம் எங்களிடம் வரும்.

தொண்டர்களை பற்றி தான் நாங்கள் கவலைப்படுகின்றோம். தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல் தானாகவே கவிழும் என்று மைத்ரேயன் கூறினார்.

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் விவகாரத்துக்கு தீர்வு காணப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, விரைவில் முடிவு எட்டப்படும் என தெரிவித்த ஓபிஎஸ், இரு அணிகளும் இணையும் சாத்தியக்கூறு உள்ளிட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு  பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com