வெங்கையா நாயுடுவிடம் முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்ன?

சென்னையில் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.5,312 கோடி நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அமைச்சர்
வெங்கையா நாயுடுவிடம் முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகள் என்ன?

சென்னையில் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.5,312 கோடி நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது வெங்கையா நாயுடுவிடம் முதல்வர் பழனிசாமி வைத்த கோரிக்கைகள் விவரம்:

- மாதவரம் முதல் சிறுசேரி வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை மொத்தம் 103.55 கிலோமீட்டர் ஒருவழித்தட மெட்ரோ ரயில் பாதை ரூ.85,047 கோடியில் செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

- பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) வரைமுறையில், அந்த நகரத்தின் அனைத்து பகுதியிலும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

- சென்னை பெருநகரம், கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய 6 மாநகராட்சிகள் பொலிவுறு நகர திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாநகராட்சியிலும் பொலிவுறு நகரத் திட்டத்திற்கு தேர்வு செய்ய வேண்டும்.

- தமிழகத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனியே ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

- மீஞ்சூர் மற்றும் நெமிலியில் ஏற்கனவே உள்ள 100 எம்.எல்.டி., கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மேலும், ரூபாய் ரூ.5312 கோடி மதிப்பீட்டில் 400 எம்.எல்.டி., திறனுடைய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு முகமை நிதியை பெற்றுத்தர வேண்டும்.

- அடையாறு, கூவம், பக்கிங்காம் மற்றும் ஒட்டேரி நல்லகரை ஓரங்களில் வாழும் குடிசைவாழ் மக்களின் மறுவாழ்வுக்கென மத்திய அரசு நிதியுடன் சுமார் 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளித்து ரூ.5000 கோடி நிதியும் வழங்க வேண்டும்.

- சென்னையில் 2 லட்சம் குடும்பங்கள் நீர்நிலையின் அருகில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  இவர்களுக்கு மத்திய, மாநில அரசின் பங்கேற்புடன் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒரு சிறப்புத் திட்டத்தினை உருவாக்கிட வேண்டும்.

- அனைவருக்கும் வீடு திட்டத்தை நகர்ப்புறத்திற்கு அருகாமையில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

- சென்னையிலுள்ள மீனவர்களுக்கு கடற்கரை அருகிலே வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்த கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை தளர்த்த வேண்டும்.

- மாநகராட்சி பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு 60 சதுரமீட்டர் வரை சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

- தமிழ்நாட்டில் மேலும் 10 மாவட்ட தலைநகரங்களில் அகில இந்திய வானொலி பண்பலை வரிசை துவங்க வேண்டும்.

- தமிழகத்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்துடன் இணைந்து பூனாவிலுள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் மண்டல மையத்தினை தொடங்க வேண்டும் என தனது கோரிக்கை மனுவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com