விழுப்புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

விழுப்புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
விழுப்புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அரசுடனான தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தொடங்கினர். இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

திமுகவின் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட முக்கிய சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 8 மண்டலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்து வேலைநிறுத்தம் தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெளியூர் செல்லவதற்கு காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியினர்.

இந்நிலையில், விழுப்புரம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் ஹென்றி பால்ராஜ். இவர் இன்று காலை பணிமனையின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஹென்றி பால்ராஜ், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹென்றி பால்ராஜ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மேலும் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தொடர்ந்து 2 நாட்களாக பேருந்து ஒட்டியதால் பேருந்தை இயக்கச் சொல்லி கிளை மேலாளர் கட்டாயப்படுத்தியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஓட்டுநர் புகார் தெரிவித்துள்ளார். .

இச்சம்பவம் போக்குவரத்து தொழிலாளர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிமனையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com