2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போதிருக்கும் வெப்ப அளவை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் தற்போதிருக்கும் வெப்ப அளவை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில், தமிழக மற்றும் புதுச்சேரி மக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பக் காற்று அதிகரிக்கும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனல் காற்று வீசும்.

தமிழகத்தில் தற்போதிருக்கும் வெப்ப அளவை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

தமிழகத்தில் உள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யலாம்.

14 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. சென்னை உட்பட வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பக் காற்று அதிகரிக்கும். வெப்பச் சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com