ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனைக்கு காரணம் என்ன?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனைக்கு காரணம் என்ன?

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் 9 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சிபிஐயின் இந்த அதிரடி சோதனைக்கு காரணங்கள் என்னவாக இருக்கும் என தெரியாமல் கட்சியினரும், பொது மக்களும் பட்டிமன்றம் நடத்த துவங்கிவிட்டனர்.

அந்த வகையில் இதுவெல்லாம் அதிரடி சோதனைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.

- வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையில் சோதனை நடைபெறலாம்.

- ரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக புகார் காரணமாக இருக்கலாம். கடந்த மாதம் அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

- வாசன் ஹெல்த் கேர் லிமிடட் நிறுவனர் ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்துக்கும் விளக்கம் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் கார்த்தி சிதம்பரம் இடம்பெற்றுள்ளதின் அடிப்படையில் இருக்கலாம்.

- ஏர்செல் - மேக்சிஸ் பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருப்பதாலும் சிபிஐ சோதனை நடைபெறலாம் என பேசப்படுகிறது.

எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த எந்த தகவலை சிபிஐ வெளியிடவில்லை.

இந்நிலையில், சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com