மே.29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: அமைச்சர் ஆர். காமராஜ்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மே.29-ம் தேதி நடைபெறவுள்ளது என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ். 
மே.29-ல் திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: அமைச்சர் ஆர். காமராஜ்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மே.29-ம் தேதி நடைபெறவுள்ளது என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ். 

திருவாரூர் கீழவீதியில் ஆழித்தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தேரோட்டத்துக்கு தேவையான மூங்கில்கள், முட்டுக் கட்டைகள் உள்ளிட்டவை வாங்க ப்பட்டுள்ளன. புதிய ஆழித்தேர் உருவாக்கப்பட்டதால் வடக்கயிறு அலங்கார வாகனங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. எனவே நடைபெறவுள்ள தேரோட்டத்துக்கு மூங்கில்கள், தடு ப்புக் கட்டைகள் மட்டுமே போதும் என்ற நிலையில் அவைகள் வாங்கப்பட்டன.

தேருக்குப் பயன்படுத்தப்படும் குதிரைகளை புதுப்பிக்கும் பணி கும்பகோணத்தில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தேரில் அமைக்கப்படும் குதிரைகள், ரிஷப வாகனம், யாளம், பாம்பு யாளம், துவாரபாலகர், பெரியகத்திகேடயம், பூக்குடம், ராஜாராணி உள்ளிட்டப் பொம்மைகள் விழா தொடங்கும் முன்பு உருவாக்கப்பட உள்ளன. 

இந்நிலையில் நேற்று கீழவீதியில் நடைபெற்று வரும் தேர் கட்டும் பணிகளை இன்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஆய்வு மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 100 ஆண்டுகள் பழமையான ஆழித்தேர் கடந்த அதிமுக ஆட்சியின் போது புனரமைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

நிகழாண்டு 2-வது முறையாக ஆழித்தேரோட்டம் மே. 29-ம் தேதி காலை 7 முதல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கு முதல் நாள் மே. 28-ம் தேதி விநாயகர், சுப்பிர மணியர் தேரோட்டம் நடைபெறுகிறது. மே. 29- ம் தேதி தியாகராஜர், சண்டிகேஸ்வரர், அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தை அடுத்து தெப்பத்திருவிழா நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் காமராஜ். 

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, தியாகராஜர் கோயில் இணை ஆணை யர் சிவராம்குமார், கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com