உள்ளாட்சித் தேர்தலுக்கு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் அறிவுரை

உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அனைத்து நிலை அலுவலர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கிப் பேசுகிறார் மாநில தேர்தல் ஆணையர்
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கிப் பேசுகிறார் மாநில தேர்தல் ஆணையர்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அனைத்து நிலை அலுவலர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 5,133 இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த ஏப்.6-இல் வெளியிடப்பட்டது குறித்தும், உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் இணையதளத்தின் மூலம் உள்ளீடு செய்தல் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஆணையர் பேசியது:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்களை உரிய காலத்துக்குள் தயார் செய்து முடிக்க வேண்டும். தேர்தல் நடத்திட தேவையான வாக்குச்சாவடி அலுவலர்களின் விவரங்களை முன்கூட்டியே கண்டறிந்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வைப்புத் தொகையை திருப்பி வழங்க வேண்டும்: கடந்த 2016 உள்ளாட்சி தேர்தலின்போது, வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புத் தொகைகளை, சம்பந்தப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனடியாக வேட்பாளர்களுக்கு தகவல் அளித்து விடுதல் ஏதுமின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் அலுவலர்கள், மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் அனைத்து அறிவுரைகளையும், சட்டப்பூர்வமான ஆணைகளையும் பின்பற்றி உரிய காலகெடுவுக்குள் அனைத்துக் கட்ட ஆயத்த பணிகளையும் முடித்து, எதிர்வரும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மாவட்ட அளவில் இருப்பில் உள்ள அனைத்து வகையான தேர்தல் பொருள்களையும் தேர்தல் ஆணையர் பார்வையிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திண்டிவனம் உதவி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, கோட்டாட்சியர் அ.ஜீனத்பானு, ஊராட்சி உதவி இயக்குநர்கள் சீனிவாசன், ஜீஜாபாய் மற்றும் அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com