பிளஸ் 1க்கு அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 1க்கு அடுத்தாண்டு முதல் பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு முடிவை www.tcresult.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 25 முதல் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 19-ம் தேதி முதல் - மே 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

மேலும், பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதுபோல், வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும். இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.  

நுழைவுத்தேர்வுகளை சந்திக்கும் வகையில் பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. புதிய பாடத்திட்டம் உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில், யோகா மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த பாடங்கள்  சேர்க்கப்பட உள்ளன என்று கூறினார்.  

மேலும், நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாவட்ட நூலகங்களுக்கு 2.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளசு.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com