வெளியே தலைகாட்ட வேண்டாம்... பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணியளவில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
வெளியே தலைகாட்ட வேண்டாம்... பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை: சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணியளவில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

கோடை வெயில் உச்சம் அடைந்துள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த ஒரு சில தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், முற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெப்பம் அதிகமாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவிலேயே பல இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதால், 12 மணியளவில் இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் அதிக வெப்பம் பதிவான நாளாக இன்றைய தினம் அமையலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
 

முன்னதாக, 

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஆந்திரக்கடல் பகுதிகளிலிருந்து அதிகமான வெப்பக் காற்று வீசுவதால், வடதமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு அனல்காற்று வீசும். வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் செவ்வாய்க்கிழமை 114 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும் தென்மேற்குப் பருவமழை தற்போதுதான் அந்தமான் பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை குறித்த விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படும். வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னை நகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
10 இடங்களில் சதம்: புதன்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 10 இடங்களில் 100
டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 111 டிகிரி வெப்பம் பதிவானது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹுட்டில்) :
திருத்தணி 111
வேலூர் 110
சென்னை 108
கடலூர், கரூர் பரமத்தி,
பாளையங்கோட்டை 107
திருச்சி 106
மதுரை 105
சேலம் 103
தருமபுரி 101
புதுவையில் 107 டிகிரி: புதன்கிழமை நிலவரப்படி புதுச்சேரியில் 107 டிகிரியும், காரைக்காலில் 104 டிகிரி வெயிலும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com