அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தில்லி பயணம்

புது தில்லியில் மே 21ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
புதுதில்லி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள்.
புதுதில்லி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள்.

புது தில்லியில் மே 21ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் 15 விவசாயிகள் வியாழக்கிழமை புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தேசிய நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை 42 நாள்கள் புதுதில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், அகில இந்திய அளவில் அனைத்து மாநில விவசாய சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க புதுதில்லியில் மே 21 ஆம் தேதி அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு, பொதுச் செயலர் மன்னார்குடி பழனிவேல், செயலர் முருகன், துணைத் தலைவர் கிட்டப்பா ரெட்டி உள்ளிட்ட 15 விவசாயிகள் திருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தில்லியில் 21 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்துவதா அல்லது லட்சம் விவசாயிகளைத் திரட்டி பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதா என்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அய்யாக்கண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com