ஜாதியும், மதமும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; மொழி இல்லாமல் வாழ முடியாது: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா

ஜாதியும், மதமும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால், மொழி இல்லாமல் வாழ முடியாது என்றார் திமுக கொள்கை பரப்புச் செயலரும்,
ஜாதியும், மதமும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; மொழி இல்லாமல் வாழ முடியாது: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா

தூத்துக்குடி: ஜாதியும், மதமும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால், மொழி இல்லாமல் வாழ முடியாது என்றார் திமுக கொள்கை பரப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், நடைபெற்ற நீட் தேர்வு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு கருத்தரங்கில் அவர் பேசியது:

ஜாதியும், மதமும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால், மொழி இல்லாமல் வாழ முடியாது. இந்தியா ஒரு மொழி மட்டும் பேசப்படும் நாடு அல்ல. அதனாலேயே இந்தியாவை துணைக் கண்டம் என அழைக்கிறார்கள்.

நாடாளுமன்ற ஆட்சி மன்றக்குழு, ஒரு பரிந்துரையை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. அதில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பத்தாம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும், அப்படி ஏற்காவிட்டால் உடனே மக்களவையைக் கூட்டி சம்பந்தப்பட்ட பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால்தான் திமுக சார்பில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்தி படித்தால்தான் வேலை என தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அப்படி என்றால் வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தமிழகத்துக்கு வேலை தேடி வர வேண்டிய அவசியம் என்ன?

ஹிந்தி மூலம் சம்ஸ்கிருதத்தை கொண்டு வர முயற்சிக்கப்படுகிறது. எத்தனை மொழிகள் வந்தாலும் தன்னை அழித்துக் கொள்ளாத ஒரே மொழி தமிழ் மட்டுமே. எத்தனையோ பண்பாட்டு படையெடுப்பு நிகழ்ந்தபோதிலும் சிதையாத ஒரே மொழி தமிழ் மட்டுமே.

இதேபோல, மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது என்பதாலேயே அதை திமுக எதிர்த்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com