போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் புறப்படுங்கள்: ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது என்றும் போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்.
போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் புறப்படுங்கள்: ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

சென்னை: அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது என்றும் போர் வரும்போது பார்த்துக்கொள்வோம். தற்போது, பாதுகாப்பாக வீட்டிற்கு புறப்படுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (மே.19) முடிவடைகிறது. இரண்டாம் கட்டமாக ஜூன் மாத மத்தியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இன்று ரஜினிகாந்த் ஆற்றிய உரையில் இருந்து சுருக்கமாக...

ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்கள் ஒழுக்கத்தை கடைபிடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒழுக்கம்தான் மிகவும் முக்கியமானது. ஒழுக்கம் அவசியமானது. ஒழுக்கம் இல்லை என்றால் முன்னேற முடியாது. இப்போது போன்று எப்போதும் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். இந்த விழாவை ஏற்படுத்தி, சரியாக நிர்வாகம் செய்தவர்களுக்கு நன்றி. எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது.

சமூக வலைதளங்களில் பதிவிடும் தகவலானது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு ஆதரவு கொடுத்து தமிழனாக ஆக்கினீர்கள். எனக்கு 67 வயதாகிறது. இதில், 23 ஆண்டுகள் தான் நான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். மீதி 44 ஆண்டுகள் நான் தமிழகத்தில் தான் வாழ்ந்தேன். இவ்வளவு ஆண்டு இங்கு வாழ்ந்த என்னை தமிழன் ஆக்கியது நீங்கள் தான். நான் பச்சைத்தமிழன். பச்சைத்தமிழனான என்னை வேறு இடத்துக்கு போகச்சொன்னால், இமயமலைக்குதான் செல்வேன். வேறு எந்த மாநிலத்துக்கு செல்லமாட்டேன்.

மேலும், ஸ்டாலின் நல்ல நிர்வாகி. சீமான் போராளி. திருமாவளவன், அன்புமணி உள்ளிட்ட நல்ல தலைவர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், சிஸ்டம் கெட்டுப் போய் இருப்பதாகவும் அதற்கு மாற்றம் தேவை. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. எனக்கும் வேலை உள்ளது. குடும்பம் உள்ளது. அதேபோன்று உங்கள் அனைவருக்கும் வேலை, குடும்பம் உள்ளது. ஊருக்கு சென்று தொடர்ந்து வேலையை பாருங்கள், போருக்கு தயாராகுங்கள். போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்றார்.

போட்டோ எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com