விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்... கடைசி இடத்தில் கடலூர் மாவட்டம்...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி துவங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரி என மொத்தமாக 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர்
விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்... கடைசி இடத்தில் கடலூர் மாவட்டம்...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 8ம் தேதி துவங்கி 31ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுச்சேரி என மொத்தமாக 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவியர். இவர்களின் தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு பள்ளிகல்வித்துறை வெளியிட்டது. இதில், 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 92.5% மாணவர்களும் , 96.2% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாக அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள் வரிசையில், விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்திலும், கன்னியாகுமாரி மாவட்டம் இரண்டாவது இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

தமிழில் 69 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலப்பாடத்தில் யாரும் முழுமதிப்பெண் பெறவில்லை. கணிதத்தில், 13,759 பேரும், சமூக அறிவியலில் 61,115 பேரும், அறிவியலில் 17,481 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.  98.54% சதவீத தனியார் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுளனர்.​ 91.59% சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமில்லா தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியலும் வெளியாகவில்லை.

தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள், தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com