9 கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு 31-இல் தேர்தல்

தமிழகத்தில் 9 கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு வரும் 31-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
9 கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு 31-இல் தேர்தல்

தமிழகத்தில் 9 கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு வரும் 31-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையாளர் எம்.ஆர்.மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 3 சங்கங்கள், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 3 சங்கங்கள், மீன் வளத்துறை ஆணையரின் கீழ்வரும் 1 சங்கம், பால்பண்ணை அபிவிருத்தி ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 1 சங்கம் மற்றும் தொழில்துறை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ்வரும் 1 சங்கம் ஆக மொத்தம் 9 சங்கங்களில் 77 நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது. 9 தலைவர் மற்றும் 9 துணைத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல்
அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இச்சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மே 23-ம் தேதியும், வாக்குப்பதிவு மே 31-ஆம் தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் ஜுன் 5-ஆம் தேதி நடைபெறும்.
இந்த 77 நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 8 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கும், 22 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களை... நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மே 23-ஆம் தேதி காலை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தாக்கல் செய்யலாம்.
தாக்கல் செய்த வேட்புமனுவைத் திரும்பப் பெற விரும்புவோர் மே 25-ஆம் தேதியன்று பெற்றுக் கொள்ளலாம். அன்றுமாலை 5 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
போட்டி இருந்தால்...போட்டி இருப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 31-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
வாக்குகள் எண்ணும் பணி ஜூன் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 5-இல் நடைபெறும். தேர்தல் குறித்த விவரங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் ஆணையத்தின் வலைதளம்  www.coopelection.tn.gov.in   மூலம் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com