ஒசூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: 20 ஏக்கர் தக்காளி, ராகி பயிர்கள் சேதம்

ஒசூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தால், 20 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளி, ராகி போன்ற பயிர்கள் சேதமடைந்தன.

ஒசூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தால், 20 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட தக்காளி, ராகி போன்ற பயிர்கள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள போடூர் வனப் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளன. பகல் நேரங்களில் காட்டுப் பகுதியில் முகாமிட்டிருக்கும் இந்த யானைகள், இரவு நேரங்களில் போடூர், ராமபுரம், ஆழியாளம், காமன்தொட்டி, பன்னப்பள்ளி, குக்களப்பள்ளி, பிள்ளை கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சுற்றித் திரிந்து விவசாயப் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு போடூர் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 25 காட்டு யானைகள் அருகில் உள்ள ராமபுரம் மற்றும் ஆழியாளம் கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த ராகி, தக்காளி, முட்டைகோஸ் ஆகிய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இரவு முழுவதும் சுமார் 20 ஏக்கருக்கு மேலான நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விளைபயிர்களை முற்றிலும் சேதப்படுத்திய யானைகள், அதிகாலை காட்டுப் பகுதிக்குச் சென்றன. இந்த பயிர் சேதத்தால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com