சந்திரயான்-2: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனுப்பப்படும்

சந்திரயான்-2 செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
சந்திரயான்-2: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனுப்பப்படும்

சந்திரயான்-2 செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திரயான்-2 செயற்கைக்கோள் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும். 2018 தொடக்கத்தில் சந்திரயான்-2 நிலவில் இருக்கும்.
மங்கள்யான் மேலும் ஓராண்டுக்கு: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 6 மாத ஆயுள் காலத்துடன் கடந்த 2013-இல் அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் 2 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இடையே, அதன் சுற்றுவட்டப் பாதையை மட்டும் இரண்டு முறை சரிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்னும் ஓராண்டுக்கு மேல் மங்கள்யான் சிறப்பாக இயங்க வாய்ப்பு உள்ளது.
நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் உறுதிசெய்தது போல, செவ்வாய் கிரகத்தில் பருவநிலை மாற்றம் நிகழ்வதை மங்கள்யான் உறுதி செய்தது. அதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் ஆய்வுசெய்து ஒப்புக்கொண்டிருக்கிறது.
ஜூன் 5-இல் ஜி-சாட் 19: விண்வெளி கதிர்வீச்சால் பூமியிலிருந்து அனுப்பப்படும் விண்கலம் மற்றும் மின்னணு உபகரணங்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டு வரும் ஜி-சாட்19 செயற்கைக்கோள் வரும் ஜூன் 5- ஆம் தேதி ஏவப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, தகவல்தொடர்பு செயற்கைக்கோளான ஜி-சாட்17, ஜூன் 25 அல்லது 26-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com