சுகேஷின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

இரட்டை இலை தேர்தல் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீது தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.

இரட்டை இலை தேர்தல் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீது தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.
'இரட்டை இலை' தேர்தல் சின்னத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல் துறை தொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் எனத் கோரி தில்லி தீஸ் ஹஜாரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சுகேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமை (மே 20) நடைபெறும் என்று நீதிபதி பூணம் செளத்ரி தெரிவித்தார்.
தினகரன் ஆஜராக உத்தரவு: இதற்கிடையே, இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் இடையே நடைபெற்ற செல்லிடப்பேசி உரையாடலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த அவர்களின் குரல் மாதிரியை சேகரித்து சிபிஐ தடயவியல் பரிசோதனைக்கு உள்படுத்த காவல்துறை குற்றப்பிரிவுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்திருந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரனை நேரில் ஆஜர்படுத்தி குரல் மாதிரி பரிசோதனைக்கு அவரது ஒப்புதலை நீதிபதி முன்பு பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தில்லி காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை ஏற்று தினகரனை சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com