தெற்கு ரயில்வேக்கு கூடுதல் முதுநிலை பொது மேலாளர் பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வேயின் கூடுதல் முதுநிலை பொது மேலாளர் மற்றும் தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக ஜே.பி.பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜே.பி.பாண்டே
ஜே.பி.பாண்டே

தெற்கு ரயில்வேயின் கூடுதல் முதுநிலை பொது மேலாளர் மற்றும் தலைமை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக ஜே.பி.பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதுநிலை துணைப்பொதுமேலாளராக பொறுப்பில் இருந்த ஆர்.முகுந்தன் ரயில்வே பணியில் இருந்து பணி ஓய்வுபெற்றதால், ஜே.பி.பாண்டே இப்போது ரயில்வே வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாண்டே, ரூர்கி ஐஐடி-யில் கட்டுமானப் பொறியியலில் பி.டெக் பட்டமும் தில்லி ஐஐடி-யில் எம்.டெக் பட்டமும் பெற்றவர். பின்பு 1985 ஆம் ஆண்டு ரயில்வேயின் பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
மேற்கு ரயில்வேயின் பாவ்நகர் கோட்டத்தின் ரயில்வே கோட்ட மேலாளர், வடக்கு ரயில்வே மற்றும் வட மத்திய ரயில்வேயின் தலைமைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, வடமத்திய ரயில்வேயின் ஜான்சி கோட்டத்தில் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com