புதுச்சேரி: 900 கல்வி நிறுவன வாகனங்களுக்கு சிறப்பு ஆய்வு முகாம் தொடக்கம்

புதுச்சேரி போக்குவரத்துத் துறை சார்பில்  900 கல்வி நிறுவன வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் இன்று மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் தொடங்கியது்.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை சார்பில்  900 கல்வி நிறுவன வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் இன்று மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் தொடங்கியது்.

மாணவ, மாணவியர்  பாதுகாப்பினை கருத்தில் கொண்டும்,  மோட்டார் வாகன சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கிலும், புதுச்சேரி பகுதிக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்  20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்நது.

அதனபடி தொடங்கிய வாகன சிறப்பு ஆய்வு முகாமில் அனைத்து கல்வி நிறுவனங்களை சார்ந்த சுமார் 900 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படஉகின்றன்
இருக்கின்றன.

இதற்கென போக்குவரத்து துறையில் வாகன ஆய்வாளர்கள்/ உதவி வாகன ஆய்வாளர்கள் தலைமையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சிறப்பு ஆய்வில் கலந்து கொண்ட வாகனங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டதன் அடையாளமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

போக்குவரத்து ஆணையர் எஸ்டி. சுந்தரேசன் கூறியதாவது:
இதுபோன்ற சிறப்பு ஆய்வு காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியிலும் மேற்கொள்ளப்படும்.

அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்கள் வாகனங்களை ஆய்விற்குட்படுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும்.

பள்ளி வாகனங்கள் ஆய்வினை தொடர்ந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் வேன்களுக்கு சிறப்பு ஆய்வு முகாம் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com