முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு

முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தினந்தோறும் வழக்கு பதிவு செய்வது தொடர்பான பதிவேட்டை (Log Book) பராமரிக்கவும் உத்தரவிட்டார்.
முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஆளுநர் கிரண்பேடி திடீர் ஆய்வு

முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தினந்தோறும் வழக்கு பதிவு செய்வது தொடர்பான பதிவேட்டை (Log Book) பராமரிக்கவும் உத்தரவிட்டார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாரம்தோறும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன்படி சனிக்கிழமை காலை முருகம்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை ஆய்வு செய்துவிட்டு வந்துகொண்டிருந்த அவர் முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள காவல்நிலையத்திற்குள் திடீரென சென்றார். அவர் அங்கு சென்ற போது காவல்நிலையம் தூய்மை இல்லாமல் இருந்ததை அறிந்த அவர் காவல் ஆய்வாளர் பாபுஜியிடம் கேள்வி எழுப்பினார். 

காவல்நிலையத்தை இப்படித் தான் வைத்திருப்பீர்களா என்று கேள்வி எழுப்பியதோடு உள்ளே சென்று அவர் தினந்தோறும் வரும் வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் எங்கே லாக்புக் என்று கேட்டார். அது பராமரிக்க படவில்லை என்று தெரிந்துகொண்ட அவர் உடனடியாக அனைத்து குற்றவாளிகளின் கோப்புகளையும் கொண்டு வரும்படி கூறி அதனை பார்வையிட்டார். அவை சரியாக பதிவு செய்யப்படாமலும், முந்தைய மாதம் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும் இருந்தது.

இதனால் கோபமடைந்த ஆளுநர் கிரண்பேடி குற்றவாளிகளின் கோப்புகளையே சரிவர கவனிக்காத நீங்கள் எவ்வாறு பொதுமக்களை பாதுகாப்பீர் என்று கடுமையாக சாடினார்.. உடனடியாக அருகில் இருந்த காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹீமிடம் இதுகுறித்து உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி அனைவருக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க உத்தரவிட்டார் .

காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் திடீர் ஆய்வு செய்ததால் அனைத்து காவலர்களும் பெரும் பதட்டத்துடனே காணப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com