ரஜினி ஒரு வியாபாரி; அவரைப் பற்றிக் கவலை இல்லை: தமிழக அமைச்சரின் அதிரடி பேச்சு !

ரஜினி ஒரு வியாபாரி; அவரைப் பற்றிக் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தமிழக கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை எற்படுத்தி இருக்கிறது.
ரஜினி ஒரு வியாபாரி; அவரைப் பற்றிக் கவலை இல்லை: தமிழக அமைச்சரின் அதிரடி பேச்சு !

மதுரை: ரஜினி ஒரு வியாபாரி; அவரைப் பற்றிக் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தமிழக கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜு  தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஐந்து நாட்கள் தொடர்ந்து நடத்தினார். கோடம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்  இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார். அதிலும் குறிப்பாக ' அடுத்து நான் என்ன செய்வேன் என்பது கடவுள் கையில் இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என் பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றெல்லாம் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இவையெல்லாம் அவர் தனது அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமாக பேசுவதாக கூறப்பட்டது. 

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று, இறுதி நாளன்று அவர் பேசுகையில், ‘நாட்டில் சிஸ்டம் கெட்டுபோய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது அவரவர் வேலையை பாருங்கள்.போர் என்று வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அறைகூவல் விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியது.

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது:

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி தொடங்கிய நடிகர்கள் கதி என்னாச்சு என்று அனைவருக்கும் தெரியும். நடிகர் ரஜினி கூறியதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளத் தேவையில்லை. அவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இருக்கலாம். அதை நான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப் போகவில்லை.அதிமுக வலிமையான மக்கள் இயக்கமாக இருந்து வருகிறது. எந்த ஒரு புது கட்சிக்கும் நாங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறந்த வியாபாரி. தன படம் ஓட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு வேறு ஒன்று பேசுவார். எனவே இப்படி நடிகர்கள் பின்னால் போவதை எல்லாம் மக்கள் தவிர்த்து விட்டனர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு  தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com