1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக தமிழகக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு

சென்னை: 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக தமிழகக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

+1, +2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு குறித்தும், மதிப்பெண் மாற்றம் குறித்தும் தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

அது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிபிஎஸ்இக்கு மேலான பாடத்திட்டத்தை வடிவமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் மொழி வரலாறு, பண்பாடு குறித்து பாடங்கள் இடம்பெறும்.

6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி பாடம் அறிமுகம் செய்யப்படும். அறிவியல் பாடத்தில் கணினி பாடத்தை ஒரு பிரிவாக படிக்கும் வகையில் வடிவமைக்கப்படும். இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பாடத்திட்ட மாற்றப் பணிகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1,6, 9, 11ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 2018 - 19ம் கல்வியாண்டிலும், 2,7,10, 12ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் 2019-20 கல்வியாண்டிலும், 3,4,5,8ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் 2020-21ம் கல்வியாண்டிலும் மாற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com