அரசியல் சிஸ்டத்தை சரிசெய்ய நாங்கள் இருக்கிறோம்: ரஜினிகாந்த் பேச்சு குறித்து தீபா அறிக்கை

அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்க அரிமாக்களாக தயாராக இருக்கிறோம். ர
அரசியல் சிஸ்டத்தை சரிசெய்ய நாங்கள் இருக்கிறோம்: ரஜினிகாந்த் பேச்சு குறித்து தீபா அறிக்கை

அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்க அரிமாக்களாக தயாராக இருக்கிறோம். ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியல்லை என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலர் தீபா கூறியுள்ளார்.

இது குறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்தியாவிலேயே முதல் முறையாக நடிகர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் சென்றவர் என்றால் அது மறைந்த S.S.ராஜேந்திரன். நடிகர் நாடாண்டது என்றால் எம்ஜிஆர், நடிகை அரியணை ஏறியது ஜெயலலிதா. இவர்களை மக்கள் மகத்தான வெற்றிபெறச் செய்தார்கள் மக்கள் தலைவர்களாக வலம்வந்தார்கள், ஏனெனில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகி திராவிட இயக்க சமூக சீர்திருத்த கொள்கைகளை மக்கள் மத்தியில் நாடகம், திரைபடம், வாயிலாக எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.

தற்போது தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் வருவாரா? வரமாட்டாரா? என்று மிக சிலர் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்திய ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதற்கு சட்டத்தில் தடையில்லை, ஆனால் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் எம்ஜிஆர், அம்மா, ஆகியோர்களைத் தவிர தமிழ் மண்ணில் வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை, இனிமேலும் வெற்றி பெற போவதில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி மிகப் பெரும்பான்மையான மக்களிடையே அதிருப்தி தான் நிலவுகிறது. காரணம் தமிழகத்தில் அவர் வாழ்ந்து கொண்டு, அவரும் அவர் குடும்பமும் முழுமையாக திரைப்படத் துறையில் வருமானம் ஈட்டுகின்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் செயல்பட்டு வருபவர். அவ்வப்போது புனிதமான அரசியல் துறையை ஊறுகாய் போன்று பயன்படுத்த நினைப்பதை மக்கள் ரசிக்கவில்லை.

ஆனால் அவர் நடிப்பை ரசிக்கிறார்கள். அரசியலிலும் அவர் ஒரு நிலையான ஆதரவையும் தெரிவிப்பதில்லை. தற்போது 1996ல் தவறான முடிவெடுத்தேன். அதனால் பலர் அரசியல் ஆதாயம் அடைந்தார்கள் என்று முதலில் நடந்த ரஜினி ரசிகர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் புலம்புகிறார். 

முதலில் அரசியலுக்கு வருவதற்கு துணிச்சல் வேண்டும். கடந்த 25 வருடங்களாக அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், என்று கூறுவதற்கே முடிவே இல்லாமல் காலம் கடந்துவிட்டது. தற்போது 1996ல் ரஜினி எடுத்த தவறான முடிவு என்ன?? என்பதை வெளிப்படையாக கூறாதது ஏன்? இவரால் அரசியல் ஆதாயம் பெற்றவர்கள் யார் என்பதை அறிவிக்க தயாரா? தயங்குவது ஏன்? திமுக, தமாக கூட்டணியைத் தான் ரஜினி கடந்த 1996ல் ஆதரித்தார் என்பது குறிப்பாகும். 

 அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று இவர் பேசுவதற்கு முதலில் தகுதி உண்டா? ஏனெனில் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க திரைப்படத்துறை சிஸ்டத்தில் இருப்பவர், அத்துறையில் உள்ள குறைகள் ஆயிரம் இருக்கிறது. தென்னிந்தியா திரைப்பட நடிகர் சங்கத்தில் 3000 பேர் உள்ளார்கள். அதிலே 3000 பிரச்சனைகள் உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த சிஸ்டத்தை ஒழுங்குபடுத்த ரஜினிகாந்த் முயற்சி செய்தாரா? தமிழக அரசியல் சிஸ்டத்தை தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா காட்டிய ஆட்சி நிர்வாக தன்மையை பாடமாக ஏற்று எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காட்டிய நிர்வாக திறமையை சரிசெய்ய எங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்க அரிமாக்களாக தயாராக உள்ளபோது, தமிழ்மொழியைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும் துளியும் அக்கறை கொள்ளாத ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியல் சிஸ்டத்தை பற்றி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியல்லை. 

மேலும், காவேரி பிரச்னையில் ரஜினிகாந்த் நிலைபாட்டை தெளிவுபடுத்த தயாராக உள்ளரா? நீட் தேர்வுக்கு அறிக்கைவிடாதது ஏன்? இந்தி எதிர்ப்பு குறித்து பேசத் தயாரா? ஈழத்தமிழர் பிரச்னை பற்றி வாயை திறக்காதது ஏன்? ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி ரஜினி அறிவாரா? அரசியல் களம் என்பது போர்க்களம் ஆகும். ரஜினி தேர்தல் களத்தை மட்டும் கருத்தில் கொண்டு போருக்கு தயார் என்று பேசுவதை நாட்டு மக்கள் அங்கீகரிக்கவில்லை. திராவிட இயக்க மண் எளிதில் யாரிடமும் ஏமாறாது, ஏமாற்றவும் முடியாது, ரஜினி அரசியல் களம் குறித்து எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை, தமிழ் மக்கள் உணர்வுகளை கண்ணாடியாக பிரதிபளித்து மக்களின் வேண்டுகளுக்காக இந்த அறிக்கையின் மூலம் மக்கள் விருப்பத்தை வெளியிடுகிறேன் என்று தீபா கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com