திட்டமிட்டபடி இன்று சாலை மறியல் போராட்டம் : தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம்

திட்டமிட்டபடி இன்று(மே 23) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல.ராஜாமணி தெரிவித்தார்.

திட்டமிட்டபடி இன்று(மே 23) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் செல்ல.ராஜாமணி தெரிவித்தார்.

கரூர் வாங்கலில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாயனூர் அரசு மணல் குவாரியில் உள்ளூர் லாரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மணல் ஏற்றப்படுகிறது. வெளிமாவட்ட லாரிகள் ஒரு லோடு மணல் ஏற்ற 10 நாட்களுக்கும் மேலாகிறது. மேலும் மாயனூர் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் வெளிமாவட்ட லாரிகளை நிறுத்தினால் சிலர் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மணல் அள்ளுவதில் சீனியாரிட்டி முறை கடைப்பிடிக்க வேண்டும். மணல் கடத்தலைத் தடுக்க ஆன்லைன் புக்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ஏமூரில் வரும் 23 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) கரூர் - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டு ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் சென்ற வாரம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. வருவாய்த் துறை அதிகாரிகளும் எங்களை அழைத்து பேசவும் இல்லை. எனவே திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை ஏமூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com